Sunday, January 3, 2016

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்(ஆங்கிலம்: என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும்.

தோற்றம்
1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும் (251 சதுர கிலோ மீட்டர்கள்), முண்டந்துறை புலிகள் சரணாலயமும் (567 சதுர கிலோமீட்டர்கள்) உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இருசரணாலயங்களையும் ஒன்றிணைந்து, இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, இக்காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தினை ஒட்டியுள்ள வீரப்புலி, கீழமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்களிலுள்ள குறிப்பிட்ட (77 சதுர கிலோமீட்டர்கள்) பகுதிகளையும் இணைக்கப்பட கூறப்பட்டுள்ளது. மேலும், 2006 ஆண்டு, இக்காப்பகத்தின் 400 sq. km (150 sq mi) முக்கிய பகுதியை, இந்தியாவின் தேசிய பூங்காப்பகுதிகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.

அமைவிடம்
தமிழ்நாட்டில் உள்ள முண்டன்துறை திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள வனவிலங்கு சரணாலயம் சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது.இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் நெல்லை-தென்காசி ரயில் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும். இது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பருவ காலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை ஆகும்.

சூழிடம்
இக்காப்பகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு திசைப்பகுதிகள் வனங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் மட்டும் கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட(~135) கிராம வனப்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, கட்டுப்பாடான வனமேலாண்மை செயற்படுத்தப்படுகிறது.
இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி புள்ளிமான் கடம்பை மான்கள், காட்டுப்பன்றிகள், சிங்கவால் குரங்குகள் மிகுதியாக வாழ்கின்றன.
இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன.

சுற்றுலா
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி போன்றவைகள் உள்ளன.
ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல், இங்குள்ள பாணதீர்த்தம் அருவியில் எடுக்கப்பட்டதாகும்.
வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு.

சிறப்புகள்
இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்துள்ளது.
2010/11 ஆண்டு நிதியாண்டில், ரூபாய்194.33 இலட்சங்களை, புலிகள் திட்டத்திற்காக தர, 28. August 2010 தேதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இசைந்துள்ளது குறிப்பிடதக்க வளர்ச்சியாகும்.

உயிரின வகைமை

உலக அறிஞர்களால், உயிரின வகைமை உள்ள இடங்களில் 18 முக்கியமென அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இக்காப்பகமும் ஒன்றாகும். இக்காப்பகத்தில் 32 தாவர இனங்களும் 17 விலங்கு இனங்களும் அழியும் நிலையிலுள்ளவை என பட்டியலிடப்பட்டுள்ளன.

விலங்கினங்கள்
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, மான், மிளா, யானை, புலி போன்ற அரிய வகை விலங்கினங்கள் காணப்படுகிறது. December, 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 45 சிறுத்தைகளும் 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட அதிகம்.


இந்த சரணாலயத்தில் புலிகளை தவிர சிறுத்தைகள், நரிகள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், பலதரப்பட்ட குரங்குகள் மற்றும் கடம்பை மான்களையும் காணலாம். 2014ஆம் ஆண்டில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் பெருக்கம் கூடியுள்ளது

சுற்றுப்பகுதி கிராமங்கள்


1. நாகன்குளம்
2. சிதம்பராபுரம்
3. மூங்கிலடி
4. கலுங்கடி
5. சிங்கம்பத்து
6. கருவேலன்குளம்
7. கட்டார்குளம்
8. பத்மனேரி
9. குடில்தெரு (அ) சிவசண்முகபுரம்
10. மடத்து தெரு
11. கீழப்பத்தை
12. மேலப்பத்தை
13. மஞ்சுவிளை
14. வண்டிகாரன் தெரு
15. சாலை நயினார் பள்ளிவாசல்
16. தோப்பூர்
17. சாலை புதூர்
18. மாவடி
19. திரட்டூர்
20. காமனேரி
21. கோவிலம்மாள் புரம்
22. குட்டுவன் குளம்
23. சவளைக்காரன் குளம்
24. ஊச்சிக் குளம்
25. பறையர் குளம்
26. படலையார் குளம்
27. ஜெ.ஜெ. நகர்
28. செட்டிமேடு
29. சுப்பிரமணியபுரம்
30. மீனவன் குளம்
31. கேசவநேரி
32. ராமகிருஷ்ண புரம்
33. வடுகச்சி மதில்
34. கள்ளிக்குளம்
35. சீவலப்பேரி
36. வடகரை
37. கடம்போடு வாழ்வு
38. பெருமாள் குளம்
39. ஆரைகுளம்
40. பெல்ஜியம் (Island of Peace)
41. தம்பி தோப்பு
43. அம்பேத்கார் நகர்
44. கக்கன்நகர்
45.புதுத்தெரு
46.சிவபுரம்
47.வடகரை
48.கருப்பந்தோப்பு

49.பச்சாந்தரம்

அமைவிடம்


மாநிலம் : தமிழ்நாடு திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு.


திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேரூந்தான கணபதி பஸ் இயங்குகிறது. இதே பஸ் திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம்.



கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் - தென்காசி, நாகர்கோவில் - புளியரை செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன.

தல சிறப்புகள்




இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். ராஜ கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது - 156 அடி உயரம். மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும் இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன. திருப்பெருந்துறையில் உள்ளது போலவே, 32 கொடுங்கைகள் உள்ளன. இத்தலத்திற்கு சோராரணியமென்றும், புன்னைவனமென்றும் பெயர்களுண்டு. சுவாமிக்கு 1. புன்னைவனநாதர், 2. பிரமநாயகன், 3. பரிதிநாயகன், 4. சுந்தரலிங்கம், 5. களந்தை லிங்கம், 6. பைரவ லிங்கம், 7. வீரமார்த்தாண்ட லிங்கம், 8. திரிபுரஹரன், 9. வைரவநாதர், 10. சாமள மகாலிங்கர், 11. சோம நாயகர், 12. குலசை நாயகர் முதலிய பெயர்களும் வழங்குகின்றன. கோயிலின் முன் வாயிலில் இக்கோயில் திருப்பணி செய்த வீரமார்த்தாண்டவர்மனும், சுந்தரரும், சேரமானும் இருபுறமும் உள்ளனர். மார்ச்சு மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களிலும், செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களிலும் சூரியனின் கதிர்கள் சுவாமி மீது படும் அற்புதக் காட்சி கண்டு மகிழத்தக்கது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

பெரிய கோவில் வரலாறு


இங்கு ஓர் பழமையான சிவன் கோவிலும் உண்டு.


இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.

இறைவியார் திருப்பெயர் : கோமதியம்பாள், ஆவுடைநாயகி.

தல மரம் : புன்னை.

தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.

வழிபட்டோர் : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.



தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.

சுற்றுலா தலங்கள்


1. செங்கல்தேரி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள அழகான பகுதி செங்கல்தேரி ஆகும். களக்காடு முண்டன் துறை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ ஏ காலனியில் உள்ள மாவட்ட வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றே இங்கு செல்ல வேண்டும்.


2. தலையணை: களக்காடு புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது தலையணை. இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களை போல் காட்சியளிக்கும். தலையணைக்கு சற்று கீழே தேங்காய் உருளி உள்ளது. இது கிட்டத்தட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஆகும். தலையணை மற்றும் தேங்காய் உருளி பகுதிகளுக்கு களக்காடு சுற்றுப் பகுதி மக்கள் வார நாட்களில் சென்று குளித்து மகிழ்வர். காணும் பொங்கல் தினத்தில் இந்த பகுதி முழுவதும் களை கட்டும்.



3. பச்சையாறு அணை: களக்காடு நகரின் வடமேற்கே உள்ள மஞ்சுவிளை பகுதியில் உள்ளது இந்த பச்சையாறு அணை.