Thursday, February 19, 2015

இரண்டு தேவதைகள்!

நயாகராநீர்வீழ்ச்சி இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள்வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்தநீர்வீழ்ச்சியின் அருகே வந்தது. தேவதைகள்இருவரும் அந்தப் பறவையைப் பார்த்தனர்.
""அதோபார் அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில்குளிப்பதற்காக வந்துள்ளது,'' என்றது ஒரு தேவதை.
""ஆமாம்... ஆமாம்... அனீலஸ் பறவை, பன்னிரண்டுவருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும். அது நீராடுகிற காட்சியைக் காண்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு வகையில் நாம்இருவருமே யோகம் செய்தவர்களாக இருக்கிறோம்...'' என்றது மற்றொரு தேவதை.
அனீலஸ்பறவையோ, தன் அருகே இரண்டுதேவதைகள் நின்று கொண்டிருப்பதை கவனித்தபடியே, பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அதே நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டேஇருந்தது. நீர் வேகமாகத் தரையைநோக்கிப் பாயத் தொடங்கியது. வேகமாகஇழுப்பு விசையோடு பாய்ந்த நீர், அனீலஸ்பறவையையும் தள்ளிக்கொண்டு சென்றது.
இதை எதிர்பாராத அனீலஸ் பறவை, தடுமாறியபடிபாய்ந்தோடும் நீரில் சிக்கிக்கொண்டது. அதைக்கண்ட தேவதைகள் இருவரும் திடுக்கிட்டனர்.
அதில் ஒரு தேவதை, ""அதோ... அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்!'' என்றது.
உடனே மற்றொரு தேவதை, ""வேண்டாம்... அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும்,'' என்றது.
அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, ""உன்னை விடவும் நான் குறைந்தவளில்லை. அனீலஸ்ஸை காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது. எனவே, இந்த விஷயத்தில்நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!'' என்றுகூறியது.
உடனே மற்றொரு தேவதை, ""ம்கூம்... எனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைஉனக்கு எப்படிக் கொடுப்பது? எனக்குக் கிடைத்த வாய்ப்பை நானேபயன்படுத்திக் கொள்கிறேன். நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப்போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படிவிட்டுக் கொடுக்க மாட்டேன்!'' என்றுபிடிவாதமாகக் கூறியது.
அந்த நேரத்தில், "கீச்... கீச்...' என்றகீச் குரல் கேட்டது. இரண்டுதேவதைகளும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தன. அங்கே தேவதைகளின் அருகே, அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
""தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான்உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள்என்று நம்பிக் கொண்டிருந்தால், என்உயிரை எப்போதோ இழந்திருப்பேன். நானேமுயற்சி செய்து போராடியதால் தான்இப்போது உயிர் பிழைத்து உங்கள்முன்னே நின்று கொண்டிருக்கிறேன்!'' என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தால் தலை குனிந்தனர். "நமக்குள்போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிறஅறிவு கூட தேவதைகளான நமக்குஇல்லையே!' என்று வருத்தப்பட்டனர்.
""தேவதைகளே! ஏன் கவலைப்படுகிறீர்கள்? இனிமேலாவது உங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்... மனிதர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, நீங்கள் இப்படி அலட்சியமாகஇருந்தால், மிகுந்த ஆபத்தாகிவிடும்!'' என்றுஅறிவுரை கூறியது அனீஸ் பறவை. இரு தேவதைகளும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

***

ஆமை... ஆமை...

வேடன் கிலானி அன்று ஏரிக்கரையோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிறபணியில் ஈடுபட்டிருந்தான்.

""வாஆமையே! வா! உன்னைத்தான் வெகுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீ இப்போதுதான் ஏரியைவிட்டேவெளியே வருகிறாயா? இனி என்னிடம் மாட்டிக்கொள்ளப் போகிறாய்! உன்னை இப்போதே பிடித்துச்செல்கிறேன்... ஹி... ஹி... ஹி...'' என்று சிரித்தபடி, தன் பற்களை இளித்துக்கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன்.

வேடனைக்கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை.

""வேடனே! என்னைப் பிடிக்க நீ யார்? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்குஎன்ன உரிமை இருக்கிறது?'' என்றுதுணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமைகேட்டது.

""ஆமையே! நான் உன்னை விட மேலானமனிதப் பிறவியில் இருப்பவன். எனக்கு எல்லா சக்தியும்இருக்கிறது. உன்னைக் கொன்று தின்னவும்என்னால் முடியும்! அதே நேரத்தில் உன்னைஉயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும்.

""எனதுபெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது! நீ ஒரு அற்பமான பிறவி. இந்த ஏரியில் அங்குமிங்குமாக அலைந்தபடிஇருக்கிற சிறிய உயிரினம் தானேநீ! உன்னிடம் நான் பேசுவதற்கு என்னஇருக்கிறது! உன் கறி சுவையாகஇருக்கும்...''

""நாங்கள்உங்களைப் போன்ற மனித இனத்தைஎதிர்க்கும் சக்தி இல்லாதவர்கள் என்றஒரே பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தானே, வேடர்களாகியநீங்கள் எல்லாரும் எங்களைத் துன்புறுத்தி வருகிறீர்கள்!

""ஒருவேளைஉங்களை நேருக்கு நேராக எதிர்க்கிற ஆற்றலைஆண்டவன் எங்களுக்கு வழங்கியிருந்தால், நீங்கள் எங்களை இப்படித்துன்புறுத்தி கறி சமைத்து சாப்பிடுவீர்களா? இல்லை சாப்பிடத்தான் முடியுமா என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!'' என்று காட்டமாகக் கூறியது.

ஆமையின்பேச்சைக் கேட்டு வேடன் தடுமாற்றமடைந்தான். ஆமை பேசிய பேச்சுக்களை எல்லாம்ஒரு கணம் அவன் நினைத்துப்பார்த்தபோது, அதில் ஒருவித நியாயம்இருப்பதாகவே அவன் மனதுக்குத் தென்பட்டது.
அறிவுள்ளஅந்த ஆமையைக் கூர்ந்து நோக்கியவேடன், ""ஆமையே! நீ கூறியபுரட்சிகரமான கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். என்னைக்கண்டு பயந்து ஓடாமல், என்முன்னே நின்று என்னை எதிர்த்துதுணிச்சலுடன் பேசிய உன் தைரியத்திற்குநான் தலை வணங்கி நிற்கிறேன்,'' என்று கூறினான்.

அதைக் கண்ட ஆமை, ""வேடனே! நீ எனக்குத் தலை வணங்கி நிற்பதைவிட, இனிமேல் என் போன்ற உயிர்களைத்துன்புறுத்தாமல் இருந்தால் போதும்,'' என்றது.

ஆமையின்பேச்சை மதித்து, தன் கையில் இருந்தவில், அம்பு, ஈட்டி, கத்திமுதலிய ஆயுதங்களைத் தூக்கி வீசியெறிந்தான் வேடன். "இனிமேல் எந்த உயிரையும் கொல்லக்கூடாது!' என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.

***

ஞானகுரு!


ஒரு காட்டில் சிங்கம், கரடி, நரி மூன்றும்நண்பர்களாக, ஒன்றாக வசித்தன. வேட்டையாடஒன்றாகவே செல்லும். வழக்கம் போல் ஒருநாள், மூன்றும் வேட்டைக்குக் கிளம்பின. கிடைக்கும் இரையில் மூவரும் சமமாகபங்கிட்டுக் கொள்வது என்பது ஏற்பாடு. பாதையில் ஒரு மான் குறுக்கிட்டது. சிங்கம் ஒரே அடியில் அதைஅடித்து வீழ்த்தியது.
""இந்தமானை பங்குப் போடு!'' என்றுகரடிக்கு உத்தரவிட்டது சிங்கம்.
கரடி மிகவும் சிரமப்பட்டு அந்தமானை மூன்று பங்காக்கியது. ""இதோ பங்குகள்தயார்!'' என்றது. சிங்கத்திற்கு கோபம்வந்துவிட்டது.
""சமமா? எது சமம்? யாருக்கு யார்சமம்?'' என்று கேட்டு, கரடிமீது பாய்நது குதறியது சிங்கம். ராஜ மரியாதை தெரியாத உனக்குஇந்தக் கதிதான்,'' என்றது சிங்கம்.
பின்னர்நரியைப் பார்த்து கட்டளையிட்டது சிங்கம். ""இதைப் பங்கு போடு!''
நரி சிரமப்படவில்லை. எல்லாப் பங்கையும் சிங்கத்தின்முன்பே குவித்தது. தனக்கு முன்பு ஒருமிகச் சிறிய துண்டை மட்டும்வைத்துக் கொண்டது. ""அரசே! இதோ தங்கள்பங்கு!'' என்றது நரி.
சிங்கத்திற்குமகிழ்ச்சி தாங்கவில்லை. ""சபாஷ் நரியே! உன்புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகிறேன். என்ன பணிவு. ராஜமரியாதை என்ன என்பது உனக்குத்தான் தெரிந்திருக்கிறது. நீ மகா மகாபுத்திசாலிடா... இந்த பாடத்தை எல்லாம்எங்கேடா கத்துக்கிட்ட!'' என்று சிங்கம் பாராட்டுமழை பொழிந்தது.
நரி பணிவுடன் சொன்னது! ""அரசே! நான் பிறவியிலேயேபுத்திசாலி இல்லை. இப்போதுதான் நான்புத்திசாலியானேன். தங்கள் பாராட்டுகளையும் பெறுகிறேன்.''
""அதெப்படிதிடீரென்று இப்பொழுதே புத்திசாலியானாய்?''
""பிரபுவே! சற்று முன்பு தான் புத்திசாலியானேன். இதோ செத்துக் கிடக்கிறதே, இந்தக் கரடிதான் என்ஞான குரு!'' என்றது நரி.
"... ... ஹா...' என்று சிரித்ததுசிங்கம்.

***

குரு சிஷ்யன்!

முன்னொருகாலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாகஇருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப்பற்றியோ யோசிக்க மாட்டான்.
குருகுலத்திற்குவந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, "இவன் பூமிக்குப்பாரம், சோற்றுக்குத் தெண்டம்' என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறைகூறினர்.
சுவாமிகளின்பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்தஇளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான். அவனுடைய அறிவு தீட்சண்யத்தைஅவர் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். எனவே, தம்முடைய வாரிசாக அவனைக் கருதிவந்தார்.
அன்று நள்ளிரவு நேரம். குருநாதர், தம்முடையமாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அங்கே அந்த இளைஞனைதவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்தில், அவர்கள் படித்த புத்தகங்கள்கிடந்தன. அவனைத் தேடிக்கொண்டு வெளியேவந்தார் குருநாதர். அவன், கொடும்பனியில் நட்டநடுவழியில் படுத்திருந்தான். அவனருகே, ஒரு சுவடி நூல்இருந்தது. அதில் ஆங்காங்கே, அவன்எழுதிய விளக்கக் குறிப்புகளும் காணப்பட்டன. அவற்றை மேலோட்டமாய் பார்த்தகுருநாதர் வியப்புற்றார். தூங்கிக் கொண்டிருந்த சீடனை தொந்தரவு செய்யவிரும்பாமல், தன்னுடைய மேலாடையை எடுத்து அவருக்குப் போர்த்தினார். சுவடிக் கட்டுடன் உள்ளே சென்றார். இரவுநெடுநேரம் வரை சீடனின் குறிப்புரைகளைஅவர் அக்கரையோடு படித்தார். தமக்குள் பாராட்டிக் கொண்டார்.
பொழுதுவிடிந்தது. கண்விழித்தான் இளைஞன். பக்கத்தில் சுவடிகளைக்காணவில்லை. குருவின் மேலாடையை யாரோ அவன் மீதுபோர்த்தியிருந்தனர். மாணவர்களில் யாரேனும் அந்தக் குறும்புச் செயலைக்செய்திருக்க வேண்டும் என்று பட்டது. ஆனாலும், குருவின் மேலாடையை இரவு முழுதும் தான்போர்த்திக் கொண்டிருந்தோம் என்பதே அவனுக்கு நடுக்கத்தைக்கொடுத்தது. குருவிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றான்இளைஞன். குருநாதர் அவனை வரவேற்று, ""நீதான் இதையெல்லாம்எழுதியதா?'' என்று அன்புடன் கேட்டார்.
""ஐயனே! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால்என்னை மன்னிக்க வேண்டும்!'' என்று கூறியபடி, அவர்பாதங்களில் விழுந்து வணங்கினான்.
""தன்சீடன் மற்றவர்கள் நினைக்கிற மாதிரி ஒன்றும் மந்தபுத்திக்காரன்அல்ல; அவன் ஞானவான்!'' என்றுஎல்லாரிடமும் பெருமையாய் சொன்னார் சுவாமிகள். அன்று முதல் அந்தஇளைஞனை தம்முடைய முதன்மைச் சீடராக அறிவித்தார் குரு. அந்தச் சீடர்தான் பிற்பாடு, ஸ்ரீ ராகவேந்திரர் என்றுஉலகோரால் வணங்கிப் போற்றப்படுபவர்.
தம்முடையசீடர்களின் திறமையையும், திறமையின்மையையும் குருநாதர் சரிவரப் புரிந்து கொண்டிருப்பார்.

***

வசியமந்திரம் !

செம்பனூரில்தாமு என்ற இளைஞன் ஒருவன்வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலைஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனைவேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறுஅறிவுரைக் கூறினாள்அவன்சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் வெகு தூரம்நடந்து சென்றான். வழியில் ஒரு சிறியகுடிசை தென்பட்டது. அங்கே போய் குடிக்கத்தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான். குடிசையில்ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் முன்பு ஒருபாம்பு படம் எடுத்து ஆடியது. அதை அடித்துக் கொன்றான். சப்தம் கேட்டு கண்விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார்.
""தம்பிஉனக்கு ஒரு மந்திரம் கற்றுத்தருகிறேன். அதை நீ சொன்னால்மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும்,'' என்றார்.
அப்பொழுதுஒரு முயல் அவனைச் சுற்றிச்சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
""அந்தமுயலைத் தூக்கி உன் மடியில்வைத்துக் கொள்,'' என்றார் முனிவர்.
அவன் அதைத் தூக்கி தன்மடியில் வைத்துக் கொண்டான். அது அவன் மடியில்அமைதியாக இருந்தது. அதை அன்போடு முதுகில்தடவிக் கொடுத்தான். அது நீண்ட நாள்பழகியதுபோல் அவன் மடியில் அமர்ந்திருந்தது.
""அதைநிற்கச் சொல்,'' என்றார்.
""முயலே! எழுந்து நில்!'' என்றான். உடனேஅது எழுந்து நின்றது.
""மிக்கநன்றி ஐயா! நான் வருகிறேன்,'' என்று கூறி அவரை வணங்கினான். குடிலை விட்டு வெளியே வந்தான். அருகில் ஏதாவது கிராமம் தென்படுமாஎன்று பார்த்தவாறு நடந்து சென்றான்.
போகும்போதே பல குயில்கள் அவன்தோள் மேல் வந்து உட்கார்ந்துகீதம் இசைத்தன. அவன் வெகுதூரம் சென்றபின்பு ஒரு கிராமம் வந்தது. அங்கு மக்கள் கும்பல் கும்பலாகநின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு போய் நின்று அவர்கள்என்ன பேசுகின்றனர் என்று கவனித்தான். புதியவனானஅவனைப் பார்த்த ஒரு முதியவர், ""தம்பி! இங்கு இரவில் சிறுத்தைப்புலிஒன்று வருகிறது. எங்கள் ஆடுகளை அதுபிடித்துச் செல்கிறது. வயலில் வேலை செய்யக்கூட மக்கள் பயப்படுகின்றனர்,'' என்றுநடுங்கிய குரலில் கூறினார் அவர்.
""ஐயா! பயப்பட வேண்டாம். நான் அதை இன்றுஇரவு பிடித்து விடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்,'' என்றான்தாமு. அவன் பேச்சைக் கேட்டுஅனைவரும் சிரித்தனர்.
""என்னதம்பி, நாங்கள் எவ்வளவோ முயற்சிசெய்து விட்டோம். தீப்பந்தம் எல்லாம் வீசி அதைவிரட்டினாலும் அது இங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது. உன்னால் எப்படி அதைப்பிடிக்க முடியும்?''
""ஐயா! எனக்கு மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரம் தெரியும். என்னால் அதை வசியப்படுத்தமுடியும்,'' என்றான் தாமு.
அப்போதுஅங்கு ஒரு நாய் வந்தது. ""இதோ பாருங்கள், நான் சொல்வதை எல்லாம்இப்போது இந்த நாய் கேட்கும்,'' என்றான் தாமு.
""அன்புநாயே! இங்கே வா!'' என்றான்அவன்.
நாய் அவன் அருகில் வந்து, அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அவன் அதை இரண்டு காலால்நிற்கச் சொன்னான். உடனே அது முன்இரண்டு கால்களைத் தூக்கியபடி நின்றது. வேகமாக ஓடச் சொன்னான்; வேகமாக ஓடியது.
இதைப் பார்த்ததும் கிராம மக்களுக்கு மிகவும்ஆச்சரியமாகப் போய்விட்டது.
""சரி... எங்கள் கிராமத்திலேயே நீ தங்கியிரு. புலிவந்தால் காட்டுகிறேன்,'' என்றார் கிராமத் தலைவர்.
அவன் அருகில் இருந்த ஒருகுடிசையில் தங்கினான். கிராம மக்கள் அவனுக்குநல்ல உணவு கொடுத்து உபசரித்தனர்.
அடுத்தநாள் இரவு புலி உறுமும்சப்தம் கேட்டது.
அப்பொழுதுகிராமத் தலைவர் அவனை எழுப்பிமெல்லிய குரலில், ""தம்பி! புலி வந்திருக்கிறது,'' என்றார்.
அவன் உடனே எழுந்து சென்றுபுலியைத் தேடினான். புலி அருகில் இருந்தஒரு புதருக்குள் இருந்தது.
அவன் புலியை விசில் அடித்துக்கூப்பிட்டான். அதுவும் அமைதியாக அவனைநோக்கி வந்தது. அவன் அதன்முதுகை அன்போடு தடவிக் கொடுத்தான். இதை பல கிராம மக்கள்தங்கள் வீட்டில் ஒளிந்து கொண்டு சன்னல்வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவன் அந்தப்புலியிடம் என் பின்னே வாஎன்று சொல்லிக் காட்டுக்குள் சென்றான்.
புலியும்அவன் பின்னால் பழகிய நாய்க்குட்டி போல்காட்டுக்குள் சென்றது. நடுக்காட்டை அடைந்த அவன், ""இனிநீ காட்டை விட்டு ஊருக்குள்வரக்கூடாது,'' என்று சொல்லி அதைஅனுப்பி வைத்தான்.
அவன் திரும்பவும் கிராமத்திற்கு வந்ததும், மக்கள் எல்லாரும் அவனைக்கடவுளைப் பார்ப்பதுபோல் பார்த்தனர்.
ஒரு விழா எடுத்து அவனைப்பாராட்டினர். அவனுக்கு நிறைய பணமும் ஊருக்குச்செல்ல ஒரு அழகிய குதிரையும்கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தாமு அந்தக் குதிரையின் மேல்ஏறி ஒரு நகரத்திற்குச் சென்றான். அங்கு ஒருவன் ஆடு, கரடி, புலி முதலியவற்றை வைத்துக் கொண்டு வேடிக்கைக் காண்பித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவைகள் உண்மையானமிருகங்கள் இல்லை. எல்லாவற்றுக்குள்ளும் மனிதர்கள் மறைந்துஇருந்தனர். மிருகங்கள் போல வேடம் போட்டுக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த தாமு உண்மையானமிருகங்களை வைத்து வேடிக்கைக் காண்பித்தால்மக்கள் மிகவும் விரும்பி வேடிக்கைபார்ப்பர் என்று எண்ணினான். குரங்கு, நாய், நரி, பூனை, முயல்போன்றவற்றைப் பிடித்து வந்தான்.
குரங்குமுயலைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுவதைப்போல் பழக்கினான். நாய் மேல் நரிஉட்கார, அதன் மேல் பூனைஉட்கார்ந்தபடி நடக்கப் பழக்கினான்.
ஆட்டின்மீது குரங்கு சவாரி செய்வதுபோல்காட்டினான்.
இதையெல்லாம்மக்கள் விரும்பிப் பார்த்து அவனுக்குக் காசு போட்டனர்.
அந்த ஊர் இளவரசன் தினமும்ஒரு வெள்ளைக் குதிரையில் நாட்டை வலம் வருவதுவழக்கம். அவனிடம் இரண்டு குதிரைகள்இருந்தன. அதில் ஆண் குதிரைநோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. அதனால் பெண் குதிரைசொன்னபடி சரியாக நடக்காமல் முரண்டுபிடித்தது. ஒருநாள் இளவரசர் அதன்மீது அமர்ந்தபொழுது அது அவனைக் கீழேதள்ளி விட்டுவிட்டது. இளவரசனுக்குக் குதிரை மீது சவாரிசெய்ய முடியவில்லையே என்று மிகுந்த வருத்தம்ஏற்பட்டது.
அவன் தாமுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். உடனேஅவனை அழைத்து வர தன்காவலர்களை அனுப்பினார். தாமு வந்ததும் அவனிடம், தன் குதிரையை முன்புபோல் வழிக்குக் கொண்டு வந்தால் தக்கபரிசுகள் கொடுப்பதாகக் கூறினார்.
குதிரைலாயத்தில் நின்ற வெள்ளைக் குதிரையின்அருகில் தாமு சென்றான். அதுதன் தலையை ஆட்டி கனைத்தது. மெதுவாகப் பேசியபடி அதைத் தடவிக் கொடுத்தான். பிறகு அதன் மேல் அமர்ந்துசுற்றி வந்தான்.
அதைப் பார்த்ததும், இளவரசர் வியப்படைந்தார். தாமுவிடம்அது வெகு நாட்கள் பழகியதுபோல்நடந்து கொண்டது இளவரசனுக்கு வியப்பைத்தந்தது.
தாமு குதிரையை விட்டுக் கீழே இறங்கினான்.
""அன்பானகுதிரையே, உன் துணை இறந்துவிட்டதுவருத்தம் தருவதுதான். ஆனாலும் நீ உன்னைஅன்போடு வளர்க்கும் இளவரசருக்குத் துன்பம் தரலாமா? இனிஒழுங்காக நடந்து கொள்!'' என்றான். அவன் பேச்சைக் கூர்ந்து கேட்ட குதிரை "ஆம்' என்பது போல் கனைத்தது.
அதன்பிறகுஇளவரசரும் அந்தக் குதிரை மீதுஅமர்ந்து சவாரி செய்தார். முன்புபோல்இளவரசன் சொன்னபடி குதிரை நடைபோட்டது. மிகுந்தமகிழ்ச்சி அடைந்தான். தாமுவுக்கு நிறைய பணமும், பரிசுகளும்கொடுத்து அனுப்பினான் இளவரசன்.
இப்படியாகசிறிது காலத்திற்குள்ளே நிறைய பணம் சம்பாதித்துதன் தாயிடம் அவற்றைக் கொடுத்தான்.
அவனது திறமையை உணர்ந்து மிகுந்தமகிழ்ச்சி அடைந்தாள் அவன் தாய். விரைவிலேயேஅவனுக்குத் திருமணமும் செய்து வைத்தாள். அவன்ஊர் ஊராகச் சென்று விலங்குகளைக்கொண்டு வித்தைகள் காண்பித்து பணம் சம்பாதித்துத் தன்குடும்பத்தைக் காப்பாற்றினான்.

தன் சுற்றத்தாருக்கும், தன் ஊர் மக்களுக்கும்அடிக்கடி பல உதவிகளைச் செய்தான். அதனால் அவனை அனைவரும் பாராட்டினர். விரைவிலேயே அந்த ஊர் பெரியமனிதர்களில் ஒருவனான் தாமு