வேடன் கிலானி அன்று ஏரிக்கரையோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிறபணியில் ஈடுபட்டிருந்தான்.
""வாஆமையே! வா! உன்னைத்தான் வெகுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீ இப்போதுதான் ஏரியைவிட்டேவெளியே வருகிறாயா? இனி என்னிடம் மாட்டிக்கொள்ளப் போகிறாய்! உன்னை இப்போதே பிடித்துச்செல்கிறேன்... ஹி... ஹி... ஹி...'' என்று சிரித்தபடி, தன் பற்களை இளித்துக்கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன்.
வேடனைக்கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை.
""வேடனே! என்னைப் பிடிக்க நீ யார்? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்குஎன்ன உரிமை இருக்கிறது?'' என்றுதுணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமைகேட்டது.
""ஆமையே! நான் உன்னை விட மேலானமனிதப் பிறவியில் இருப்பவன். எனக்கு எல்லா சக்தியும்இருக்கிறது. உன்னைக் கொன்று தின்னவும்என்னால் முடியும்! அதே நேரத்தில் உன்னைஉயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும்.
""எனதுபெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது! நீ ஒரு அற்பமான பிறவி. இந்த ஏரியில் அங்குமிங்குமாக அலைந்தபடிஇருக்கிற சிறிய உயிரினம் தானேநீ! உன்னிடம் நான் பேசுவதற்கு என்னஇருக்கிறது! உன் கறி சுவையாகஇருக்கும்...''
""நாங்கள்உங்களைப் போன்ற மனித இனத்தைஎதிர்க்கும் சக்தி இல்லாதவர்கள் என்றஒரே பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தானே, வேடர்களாகியநீங்கள் எல்லாரும் எங்களைத் துன்புறுத்தி வருகிறீர்கள்!
""ஒருவேளைஉங்களை நேருக்கு நேராக எதிர்க்கிற ஆற்றலைஆண்டவன் எங்களுக்கு வழங்கியிருந்தால், நீங்கள் எங்களை இப்படித்துன்புறுத்தி கறி சமைத்து சாப்பிடுவீர்களா? இல்லை சாப்பிடத்தான் முடியுமா என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!'' என்று காட்டமாகக் கூறியது.
ஆமையின்பேச்சைக் கேட்டு வேடன் தடுமாற்றமடைந்தான். ஆமை பேசிய பேச்சுக்களை எல்லாம்ஒரு கணம் அவன் நினைத்துப்பார்த்தபோது, அதில் ஒருவித நியாயம்இருப்பதாகவே அவன் மனதுக்குத் தென்பட்டது.
அறிவுள்ளஅந்த ஆமையைக் கூர்ந்து நோக்கியவேடன், ""ஆமையே! நீ கூறியபுரட்சிகரமான கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். என்னைக்கண்டு பயந்து ஓடாமல், என்முன்னே நின்று என்னை எதிர்த்துதுணிச்சலுடன் பேசிய உன் தைரியத்திற்குநான் தலை வணங்கி நிற்கிறேன்,'' என்று கூறினான்.
அதைக் கண்ட ஆமை, ""வேடனே! நீ எனக்குத் தலை வணங்கி நிற்பதைவிட, இனிமேல் என் போன்ற உயிர்களைத்துன்புறுத்தாமல் இருந்தால் போதும்,'' என்றது.
ஆமையின்பேச்சை மதித்து, தன் கையில் இருந்தவில், அம்பு, ஈட்டி, கத்திமுதலிய ஆயுதங்களைத் தூக்கி வீசியெறிந்தான் வேடன். "இனிமேல் எந்த உயிரையும் கொல்லக்கூடாது!' என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.
***
No comments:
Post a Comment