Sunday, January 3, 2016

களக்காடு

களக்காடு  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா” மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரை சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. ஊரின் மையப் பகுதியில் கௌதம நதி ஓடுகிறது. இந்த நதியின் மூலம் தான் நான்குநேரியின் நான்கு ஏரிகளும் நிரம்பி வந்தன.

No comments:

Post a Comment